உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ‘குர்குரே’ வாங்கி வருவதற்கு கணவர் மறந்த நிலையில், திருமணமான ஒரே வருடத்தில் அவரது மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பெண் ஒருவர், பிரபல பேக்கேஜ் செய்யப்பட்ட சிற்றுண்டியான குர்குரே பாக்கெட் வாங்கித் தராததால், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். அட இதுக்குக் கூடவா விவாகரத்து என்பது போல் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
குர்குரே திண்பண்டத்துக்கு அந்தப் பெண் அடிமையாகிவிட்டதால், தினமும் 5 ரூபாய் குர்குரே வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்பார். அவர் தனது மனைவிக்கு பிடித்த குர்குரேவை வீட்டிற்கு வரும்போது வாங்கிக் கொண்டு வர மறந்துவிட்டார். இதனால், ஏற்பட்ட தகராறில் மனைவி கணவர் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது.
தினசரி பொழுதுபோக்கான குர்கரே சாப்பிடுவது மறுக்கப்பட்டதால் கோபமடைந்த அந்தப் பெண், தனது வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் விவாகரத்து கோரி போலீசை அணுகினார். கடந்த ஆண்டு இந்த தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். நாட்கள் செல்ல செல்ல தனது மனைவியின் ஜங்க்புட் மோகம் கவலையை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.