fbpx

கடைசி நேரத்தில் செக் வைத்த ஐகோர்ட்..!! ராகவா லாரன்சின் ’ருத்ரன்’ படத்தை வெளியிட தடை..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ’ருத்ரன்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் – ப்ரியா பவானி ஷங்கர் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், இப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

ரூ.12 கோடியே 25 லட்சம் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம், முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் நாளை மறுதினம் வெளியாக இருந்த ருத்ரன் திரைப்படம், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

"மூக்கில் வழிந்த ரத்தம்" காய்ச்சலுடன் பள்ளிக்கு சென்ற காவலரின் மகள்! சுருண்டு விழுந்து பரிதாபம்!

Wed Apr 12 , 2023
‌தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சலுடன் பள்ளிக்கு சென்ற சிறுமி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி பகுதியைச் சார்ந்தவர் சுரேந்திரன். இவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜெபா ரோஸ்லின் ஏழு வயதான அந்தச் சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். குழந்தைக்கு […]

You May Like