fbpx

பீட்சா ஆர்டர் செய்த பெண்ணிடம் ப்ரபோஸ் செய்த சம்பவம்..! 

கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு டெலிவரிபாய், பெண் ஒருவருக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட மறுநாள் அப்பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தன்னை அப்பெண்ணிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், “நேற்று உங்களுக்கு பீட்சா கொடுக்க வந்தது நான் தான். உங்களை நான் விரும்புகிறேன்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த இளைஞரின் குறுஞ்செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த பெண் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலானது. இதன்பிறகு பிரச்னை பூதாகரமாகி உள்ளது.

இதையடுத்து டெலிவரி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “எந்தவொரு தவறான நடத்தைக்கும் நிறுவனம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டதும் நாங்கள் உடனடியாக இது குறித்து ஆராய்ந்தோம். எங்கள் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரின் வேலைவாய்ப்பை நிறுத்துவதற்கான செயல்முறைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். இது குறித்த விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இது குறித்து டெலிவரி நிறுவனத்தின் அதிகாரியிடம், பாதிக்கப்பட்ட பெண் “இது நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் தனியுரிமை மீறல் என்று நீங்கள் நினைக்கவில்லையா? இரண்டாவதாக, நீங்கள் அவரை பணிநீக்கம் செய்தாலும், அவருக்கு என் முகவரி தெரியும். என்னையோ என் குடும்பத்தையோ தாக்க முயன்றால் என்ன நடக்கும்?

மெசேஜில் தனது பெயரை கபீர் என்று குறிப்பிட்டுள்ளார். பணியிடத்தில் அவரது பெயர் “மன்னு” என்று இருக்கிறது. ஆனால் அவரது மின்னஞ்சல் ஐடி பப்லு கபீர் என்று இருக்கிறது. நீங்கள் அவரது அடையாள அட்டையை சரிபார்த்தீர்களா? ஒருவருக்கு எப்படி 3 பெயர்கள் இருக்க முடியும்? இது உங்கள் நிறுவனத்தின் தரவு மீறல், நம்பிக்கை மீறல் மற்றும் தனியுரிமை மீறல். இந்த விவகாரம் தொடர்பாக எனக்கோ என் குடும்பத்திற்கோ எதாவது ஏற்பட்டால் உங்கள் நிறுவனமே முழு பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெலிவரி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அப்பெண்ணிடம், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், ஏற்றுக்கொள்ள முடியாதது. மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் டெலிவரி செய்தவருக்கு எதிராக மனிதவள மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Maha

Next Post

’ஆடம்பரத்திற்காக அட்ஜஸ்ட்மெண்ட்’..!! நயன்தாரா முன்னணி இடத்தை பிடிக்க இதுதான் காரணம்..?

Sun Jul 2 , 2023
நயன்தாரா ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் களம் இறக்கப்பட்ட இவர் ரசிகர்களின் மனதில் கனவு ராணியாக திகழ்ந்தார். தமிழ் திரைப்படத்தை பொறுத்தவரை இவர் சரக்குமாரோடு ஐயா என்ற திரைப்படத்தில் தான் முதல் முதலில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது எடுப்பான நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர், பல திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வாய்ப்புகளை சரியான வழியில் […]

You May Like