fbpx

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபியை வென்றது இந்திய அணி!… ஜப்பானை வீழ்த்தி வீராங்கனைகள் அசத்தல்!

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இதற்கிடையில் நேற்று முன் தினம் நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்திய அணியும், ஜப்பான் அணியும் வெற்றி பெற்றன. முதல் அரையிறுதியில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவையும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் கொரியாவையும் வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. அதாவது, சங்கீதா 17-வது நிமிடத்திலும், நேஹா 46-வது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 57-வது நிமிடத்திலும், வந்தனா 60-நிமிடத்திலும் கோல் பதிவு செய்தனர். முதல் கால்பகுதி (First Quarter) ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை.

2-வது கால்பகுதி ஆட்டத்தில் சங்கீதா கோல் பதிவு செய்தார். 3-வது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை. 4-வது கால் பகுதியில் மூன்று கோல்களை பதிவு செய்தது இந்தியா. இந்நிலையில், ஜார்க்கண்ட் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ராஞ்சி 2023-ல் வெற்றிபெற்ற அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் தலா ரூ. 3 லட்சமும், அனைத்து துணை ஊழியர்களுக்கும் தலா ரூ.1.5 லட்சமும் வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. கடந்த 2021-ல் நடைபெற்ற 6-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஜப்பான் அணி பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

கடன் தொல்லை!… அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!… மகள் கண்முன்னே நிகழ்ந்த துயரம்!

Mon Nov 6 , 2023
தெலுங்கானா மாநில கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திராரெட்டி உள்ளார். இவரின் பாதுகாப்பு அதிகாரி பைசல் அலி. இவர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைசல்அலி தனது குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இத்துடன் லோன் ஆப் மூலமும் பல லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் இவரை வீடு தேடி சென்றும், அடிக்கடி […]

You May Like