பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இன்னும் 3 வாரத்தில் முடிவுக்கு வரவுள்ளது. இறுதி கட்டத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி நெருங்கி வருவதால், இந்த வாரம் பிக் பாஸ் ஹவுஸ் மேட்சை உற்சாகப்படுத்தும் விதமாக, ப்ரீஸ் டாஸ்க் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரை வீட்டிற்குள் அனுப்பி வைத்து, இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ்.
அதே போல் சௌந்தர்யாவின் கிரஷ் விஷ்ணு, அருண் பிரசாத்தின் காதலியான அர்ச்சனா ரவிச்சந்திரன், விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் பேச்சாளர் மகேஷ், பவித்ராவின் தோழி உட்பட நேற்று ஒரு சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இந்த வாரம் முழுக்க முழுக்க பாச மழையில் நனைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் வார இறுதியில் பிரியத்தான் போகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், ராணவ், மஞ்சரி, ஜெஃப்ரி, விஷால் ஆகிய 7 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். இதில் இதுவரை அன்சிதா குறைவான வாக்குகள் பெற்றுள்ளதால் அவர்தான் எலிமினெட் செய்யப்படுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த வாரம் ‘செல்லம்மா’ சீரியல் மூலம் பிரபலமாகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அன்ஷிதா அஞ்சி தான் வெளியேறியுள்ளார்.
Read more ; இந்திய ரூபாய் நோட்டுக்களில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்கள் என்னென்ன தெரியுமா?