fbpx

8 இந்தியர்களின் மரண தண்டனை விவகாரம்!… மத்திய அரசு மேல்முறையீடு!

கத்தாரில் உளவு பார்த்ததாக 8 இந்திய வீரர்களின் மரண தண்டனையை எதிர்த்து இந்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கத்தாரின் அல் தஹ்ரா நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரவ் வசிஷ்ட் மற்றும் கமாண்டர்கள் சுகுநாகர் பகாலா, சஞ்சீவ் குப்தா, அமித் நக்பால், புர்னேந்து திவாரி, மாலுமி ராககேஷ் கோபகுமார் ஆகிய 8 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கத்தாரின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் திட்டம் தொடர்பான ரகசியங்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் இந்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. வௌியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது, “இந்திய அதிகாரி களின் குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் தேவையான சட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

Kokila

Next Post

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு...!

Sat Nov 11 , 2023
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பிய கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர். கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண், விஜயபாஸ்கரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கேரளாவைச் சேர்ந்த சர்மிளா என்ற […]

You May Like