fbpx

மாற்றம்…! TNPSC தேர்வு வரும் 26-ம் தேதி நடைபெறும்…! தேர்வாணையம் புதிய அறிவிப்பு..!

சிறை அலுவலர் பணித் தேர்வு வரும் வரும் 26-ம் தேதி தமிழகத்தில் 24 மையங்களில் நடைபெற உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிறை அலுவலர் பணியில் ஆண்கள் 6 பேரும், சிறை அலுவலர் பணியில் பெண்கள் 2 பேரும் நியமிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது தமிழகத்தில் 7 மையங்களில் கம்ப்யூட்டர் வழியில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த பதவிகளுக்கு 26-ம் தேதி காலை மற்றும் மாலையில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளுர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மெகா அறிவிப்பு...! மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Thu Dec 1 , 2022
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், கவுர விரிவுரையாளர்களுக்கு மாதம் 20,000 தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 5,303 கவுர விரிவுரையாளர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். மீதமுள்ள 1,895 பணியிடங்கள் காலியாக […]

You May Like