தி கேரளா ஸ்டோரி பட நாயகி அடா ஷர்மா நடித்த கமாண்டோ 2 படத்தின் ப்ரமோஷன் பணிகளும், நிகழ்ச்சிகளும் தொடங்க இருந்தன. இந்த சமயத்தில்தான் அடா ஷர்மாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடும் வயிற்றுபோக்கு மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த புதன்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்று காலையில் இருந்தே வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது குடும்பத்தினர் அடா ஷர்மாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அடா ஷர்மாவிற்கு உணவு ஒவ்வாமையால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், தன் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றியுள்ளதை புகைப்படமாக பதிவிட்டிருந்தார். அவருக்கு மருந்து கொடுக்கப்பட்டதை அடுத்து இன்னும் மோசமாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதை சரிசெய்ய அவர் விரைவில் ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொள்ள உள்ளதாகவும், கமேண்டோ 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.