fbpx

ஏரி உடைந்து ஊருக்குள் வரும் வெள்ளம்…! பதைபதைக்கும் வீடியோ..! விடாத மழை, அச்சத்தில் மக்கள்..!

கோரம்பள்ளம் குளக்கரை உடைந்து ஊருக்குள் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் மக்கள் அவதி.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது, குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிக கன மழை எச்சரிக்கையும், தேனி விருதுநகர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக கோரம்பள்ளம் குளக்கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குளக்கரை உடைந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறி வருவதால் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி நகரப்பகுதியை நோக்கி வெள்ள நீர் வருவதால் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை காரணாமாக தூத்துக்குடி நகரப்பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் கோரம்பள்ளம் குளக்கரை உடைந்து நகர்ப்பகுதியை நோக்கி வெல்ல நீர் வருவதால் மக்கள் சிக்கலில் இருக்கின்றனர். மேலும் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், தேனி விருதுநகர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

தங்கம் வாங்கப் போகிறீர்களா?… கொஞ்சம் கவனமா இருங்க!… இந்த விதிகளை மீறினால் சிக்கல்தான்!

Mon Dec 18 , 2023
தங்கம் வாங்குவதற்கும் வைத்திருப்பதற்கும் சில முக்கியமான விதிகள் உள்ளன. மீறினால், நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கி, வரி அதிகாரியின் பார்வைக்கு வரலாம். நீங்கள் தங்கம் வாங்கப் போகிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் தங்கம் வாங்கச் செல்லும்போது, உங்களிடம் பான் கார்டு அல்லது அதுபோன்ற KYC ஆவணம் கேட்கப்படலாம். நாட்டில் சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டைக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும். 2 […]

You May Like