fbpx

விமானத்தின் அளவுக் கொண்ட மிகப்பெரிய விண்கல்.. இன்று பூமியை கடக்கிறது..

கடந்த ஆண்டு பல விண்கற்கள் பூமியை கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டது.. இந்த நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு விண்கற்கள் பூமியை நெருங்கி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு பூமியை பல சிறுகோள்கள் கடந்து செல்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் பூமியை நெருங்கிச் சென்றது..

இந்நிலையில் ஏறக்குறைய ஒரு விமானத்தின் அளவிற்கு சமமான மிகப்பெரிய விண்கல், இன்று (செப்டம்பர் 13, 2022) பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 22 RQ, என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் ஏற்கனவே பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது, 49,536 என்ற வேகத்தில் பயணிக்கிறது என்றும் 3.7 மில்லியன் கிமீ தொலைவில் பூமியை கடந்து செல்லும் என்றும் என்றும் கூறப்படுள்ளது.. இருப்பினும், 84 அடி அகலம் கொண்ட சிறுகோள் 22 RQ, கிட்டத்தட்ட ஒரு விமானத்தின் அளவிற்கு சமம் என்று நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.

சிறுகோள்களைக் கண்காணிக்க, நாசா ஒரு NEO அவதானிப்புத் திட்டத்தையும் கொண்டுள்ளது, இது 90% பூமிக்கு அருகில் உள்ள பொருள்கள், நட்சத்திரங்கள், விண்கற்களை கண்காணிக்கவும், மற்றும் வகைப்படுத்தவும் உதவுகிறது, அவை கிட்டத்தட்ட 140 மீட்டர் அல்லது பெரிய அளவில் உள்ளன.

பூமிக்கு அருகில் உள்ள பொருள்கள் (NEO) என்பது பல்வேறு வகையான சிறுகோள்கள், விண்கற்கள் மற்றும் வால்மீன்களுக்கான பொதுவான பெயர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒரு மாதத்திற்கு பல முறை கடந்து செல்லும் ஒரு சிறுகோள் அளவு சிறியதாக இருக்கும்.

பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் இருந்தாலும், அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இல்லை.. ஏனெனில் அவை சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. அவை கிரகங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

வாகன ஓட்டிகளுக்கு புதிய சிக்கல்.. டிரைவிங் லைசன்ஸ் கிடைக்காதா..?

Tue Sep 13 , 2022
போக்குவரத்துத்துறையின் ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய உத்தரவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிகளை போக்குவரத்துத்துறை சமீபத்தில் வெளியிட்டது.. அதன்படி அனைத்து ஓட்டுநர் உரிம தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்தப்பட வேண்டும்.. வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.. […]

You May Like