fbpx

மாணவியை மடக்கிய ’லெஸ்பியன்’ ஆசிரியை..!! கெட்டப்பை மாற்றி தம்பிக்கு திருமணம்..!! சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

மாணவியை, லெஸ்பியன் ஆசிரியை தனக்கு ஜோடியாக ஆக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தேனி, மதுரை சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் – பழனியம்மா. இவர்களது மகள் ஷாலினி. இவர் அறிவியல் கல்லூரியில் டிப்ளமோ ஹெல்த் கேர் பாட பிரிவில் படித்து வருகிறார். அங்கு ஆசிரியை பணிபுரிபவர் தீபா. இவருக்கு முத்துப்பாண்டி என்பவருடன் திருமணம் ஆகி 3 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், தீபாவுக்கும் மாணவி ஷாலினிக்கும் லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது. இதனால், தீபா ஷாலினியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை ஆணாக உருவகம் மாற்றி சிபு என பெயரிட்டுள்ளார். மேலும், ஷாலினியை தனது தம்பி ஆனந்த் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் தீபா.

மாணவியை மடக்கிய ’லெஸ்பியன்’ ஆசிரியை..!! கெட்டப்பை மாற்றி தம்பிக்கு திருமணம்..!! சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

இதற்கிடையே, தீபாவின் கணவனுக்கு அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீபாவின் தம்பிக்கும் ஷாலினிக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனந்த் தனது மனைவி ஷாலினியுடன் நெருக்கமாக பழகி வருவதை பார்த்த தீபா, அதனை தடுத்து வந்துள்ளார். இதனால் ஷாலினிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு வரவே ஷாலினி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அதனையடுத்து, தீபா ஷாலினியை திருவாரூர் அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து, தீபாவை காணவில்லை என்று எழுந்த புகாரில் வழக்குப்பதிவு செய்து தேடி இருவரையும் கண்டுபிடித்துள்ளனர். இருவரையும் அவரவர் தாய், தந்தையுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தற்போது பெற்றோரின் பிடிவாதத்தால் நாங்கள் பிரிந்து செல்கிறோம். மீண்டும், கண்டிப்பாக இருவரும் ஒன்று சேருவோம்’ என தெரிவித்துள்ளனர்.  

Chella

Next Post

அரையாண்டு தேர்வு விடுமுறை..!! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Fri Dec 23 , 2022
அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 6, 8, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 15ஆம் தேதி தொடங்கிய, அரையாண்டுத் தேர்வு […]
அரையாண்டு தேர்வு விடுமுறை..!! மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

You May Like