fbpx

”தமிழ்நாட்டில் சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை”..!! ”கள்ளச்சாராயம் ஆறு போல் ஓடுகிறது”..!! அண்ணாமலை பாய்ச்சல்..!!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் என்பது ஆறு போல ஓடி கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை வானகரத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும், தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”சுவையான மாம்பழம் இருக்கும் மரத்தில் கல்லடி படத்தான் செய்யும். தமிழகத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது. சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. கள்ளச்சாராயம் என்பது ஆறு போல ஓடி கொண்டிருக்கிறது” என குற்றம்சாட்டினார்.

Read More : BREAKING | ”அண்ணனின் பிறந்தநாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்”..!! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்..!!

English Summary

In Tamil Nadu, murder and robbery have become normal. Life of the common man is not guaranteed.

Chella

Next Post

'கட்சி ஆரம்பித்தால் மட்டும் போதாது’..!! ’கொள்கையை அறிவிக்கல’..!! ’சினிமாவில் நல்ல நடிகராக இருந்தால் அரசியலில் ஜெயித்து விட முடியாது’..!! கி.வீரமணி கருத்து..!!

Sat Jul 6 , 2024
A party should declare its policy at the time of its inception. K. Veeramani said that this is the practice.

You May Like