fbpx

லிப்ட் இடிந்து விழுந்து விபத்து!… சுரங்கத்தில் சிக்கிய 14 பேரின் நிலை?… ராஜஸ்தானில் அதிர்ச்சி!

Lift Collapsed: ராஜஸ்தானில் லிப்ட் இடிந்து விழுந்ததில் 14 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் நீம் கா தானா மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் செங்குத்து லிப்ட் சரிந்து விழுந்ததில் PSU ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தின் 14 அதிகாரிகள் மற்றும் விஜிலென்ஸ் குழு உறுப்பினர்கள் சிக்கிக்கொண்டனர் . நேற்று இரவுமுதல் மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுரங்கத்தில் பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் செங்குத்து தண்டு இடிந்து விழுந்ததால், இந்துஸ்தான் காப்பர் அதிகாரிகள் பல நூறு மீட்டர் ஆழத்தில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை, கண்டிப்பாக அனைவரும் பத்திரமாக வெளியே வருவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, அரசு நிறுவன உயர் அதிகாரிகளுடன் விஜிலென்ஸ் குழு ஆய்வுக்காக சுரங்கத்திற்குள் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் மேலே வரவிருந்தபோது, ​​​​தண்டு அல்லது கூண்டின் கயிறு உடைந்ததால் சுமார் 14 பேர் சிக்கிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். லிப்டை கைமுறையாக நகர்த்தி, சிக்கிய பணியாளர்களை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Readmore: கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்!

Kokila

Next Post

BREAKING | ’நேற்று தடை... இன்றே வாபஸ் வாங்கிய தமிழ்நாடு அரசு’..!! என்ன காரணம்..?

Wed May 15 , 2024
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. இதனால், காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்த வெப்ப அலையால் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்களை தயார் நிலையில் வைத்திருக்க தமிழக அரசு உத்தரவிட்டது. […]

You May Like