fbpx

ஒலிம்பிக் வீராங்கனையை தீவைத்து எரித்த காதலன்..!! காவல்துறை சொன்ன அதிர்ச்சி காரணம்..!!

கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டிரான்ஸ் நஸோயா கவுண்டி காவல்துறை அதிகாரி ஜெரமையா கூறுகையில், ”இந்தாண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44-வது இடம் பிடித்த வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆத்திரமடைந்த ​​காதலன் டிக்சன் என்டிமா, ரெபேக்கா மீது பெட்ரோலை தீவைத்து எரித்துள்ளான்.

இதில் காதலன் என்டிமாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. இருவரும் எல்டோரெட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவுண்டியின் பல தடகளப் பயிற்சி மையங்களுக்கு அருகில் இருக்கும் வகையில், வீராங்கனை ரெபேக்கா நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், இது காதலனுக்கு பிடிக்கவில்லை. இதனால், ஏற்பட்ட சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது” என்றார்.

Read More : TNPSC வைத்த செக்…! இனி முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தேர்வெழுத தடை…!

English Summary

Ugandan Olympic athlete set on fire by her boyfriend

Chella

Next Post

புரோ கபடி லீக் 11வது சீசன்!. அக்டோபர் 18 முதல் தொடக்கம்!. முழுவிவரம் இதோ!

Wed Sep 4 , 2024
Pro Kabaddi League Season 11 to get underway from October 18

You May Like