இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஒவ்வொரு பயணிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய ரயில்வே துறை புதிய புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் ரயில்வேயில் லோயர் பெர்த்தை முன்பதிவு செய்தால், பல சமயங்களில் அது கிடைப்பதில்லை.
மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க ரயில்வே பல விதிகளை உருவாக்கியுள்ளது. இனி மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்களை முன்பதிவு செய்யலாம். மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் எளிதாக ஒதுக்குவது பற்றி IRCTC முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டிக்கெட் பரிசோதகர்களை அனுகி லோயர் பெர்த்தை பெற்று கொள்ளலாம்.
லோயர் பெர்த்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கிடைக்கும்: பொது ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு இருக்கைகள் இருக்கும்போது மட்டுமே இருக்கைகள் ஒதுக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இருக்கைகள் முதலில் வருபவருக்கு முதல் சேவை அடிப்படையில் கிடைக்கும். பொது ஒதுக்கீட்டில் இடம் பெறுவதில் மனித தலையீடு இல்லை. இருப்பினும், நீங்கள் டிக்கெட் பரிசோதகர்களை அனுகி லோயர் பெர்த்தை பெற்று கொள்ளலாம்.