fbpx

மழைக்காலத்தில் பரவும் முக்கிய நோய்கள்!. தடுக்கும் வழிகளை தெரிஞ்சுக்கோங்க!

Diseases: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்காட்டி வருகிறது. இதனால் கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தெருக்களில் தண்ணீர் தேங்கிவருகிறது. மேலும், மழையின் போது காற்றில் உள்ள ஈரப்பதம், தொற்று காரணமாக பல வகையான நோய்கள் ஏற்படலாம். மேலும், சாலை, வாய்க்கால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. கொசுக்களால் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. திடீர் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிற வைரஸ் தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

மழைக்காலத்தில் காற்றில் பரவும் நோய்த்தொற்றுகளால் ஏற்படும் பொதுவான நோயாக வைரஸ் காய்ச்சல் இருக்கலாம். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் எரிச்சல், சோர்வு மற்றும் உடல்வலி போன்றவற்றை உணர்கிறார். வைரஸ் காய்ச்சல் பொதுவாக காலப்போக்கில் சரியாகிவிடும், ஆனால் அது 3 நாட்களுக்கு மேல் நீடித்தால்,மருத்துவரை நாட வேண்டும்.

டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு தொற்று நோயாகும். மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலில் அதிக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, உடலில் சிவந்துபோதல், தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். டெங்குவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் ஒரு வாரத்தில் குணமடைந்துவிடுவார்கள். வாந்தி, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

காய்ச்சல், குளிர், தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தசை அல்லது மூட்டு வலி, சோர்வு, விரைவான சுவாசம், இருமல், அமைதியின்மை ஆகியவை மலேரியாவின் அறிகுறிகளாக இருக்கலாம். டைபாய்டு போன்ற நோய்கள் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. அதிக காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல் பலவீனம் போன்றவை டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகளாகும். மழைக்காலத்தில் டைபாய்டு தொற்று பரவாமல் இருக்க, சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

மழைக்காலத்தில் நோய்களைத் தடுப்பது எப்படி? ஆரோக்கியமான, சத்தான உணவை உண்ணுங்கள். இதில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். இருப்பினும், நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்கவேண்டும். அதனால் உடலில் நீர்ச்சத்து இருக்கும் மற்றும் நோய்களின் ஆபத்து குறைகிறது. ஓட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும். எந்த உணவை உண்ணும் முன் கைகளை கழுவ வேண்டும். கொசுக்களை தடுக்க, உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருங்கள். கொசு விரட்டி கிரீம் பயன்படுத்தவும் மற்றும் முழு கை ஆடைகளை அணியவும்.

சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் உப்பு கலந்த நீரால் வாயை கொப்பளித்தால் சளி பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாட்கள் ஆன திண்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை இலைகளில் கசாயம் வைத்து குடிப்பது நல்லது.

Readmore: புயலின் தீவிரத்தை உணர்த்தும் எச்சரிக்கை கூண்டு!. எண் 1 முதல் 11 வரை!. எதை குறிக்கிறது தெரியுமா?

English Summary

The main diseases that spread in the rainy season! Learn how to prevent it!

Kokila

Next Post

சென்னை ஏர்போர்டிற்கு வர மறுக்கும் கால் டாக்ஸிகள்..!! அதிரடியாக என்ட்ரி கொடுத்த அரசுப் பேருந்துகள்..!! பயணிகள் நிம்மதி.!!

Wed Oct 16 , 2024
The government busses were arranged to go inside the airport to pick up the passengers according to the arrival time of the flights.

You May Like