fbpx

பெண்ணின் இதயத்தை வெட்டி, அத்தை மாமாவுக்கு சமைத்து கொடுத்து, பின் அவர்களையும் கொலை செய்த நபர்!… அமெரிக்காவில் கொடூரம்!

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில், ஒரு பெண்ணின் இதயத்தை வெட்டி, மாமா மற்றும் அத்தைக்கு சமைத்து கொடுத்து, பின்னர் அவர்களைக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் 44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்பவர் போதைப்பொருள் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகியுள்ளார். இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த ஆண்டர்சன் 41 வயதான ஆண்ட்ரியா லின் பிளாங்கன்ஷிப்பின் வீட்டிற்குள் நுழைந்து, அவரைக் கத்தியால் குத்தி கொன்றதாகவும் அதுமட்டும் இல்லாமல் அவரது இதயத்தை மட்டும் தனியாக வெட்டி, கையில் எடுத்துக்கொண்டு அவரது அத்தை மாமாவான லியோன் பை மற்றும் டெல்சி பை ஆகியோரின் வீட்டிற்கு எடுத்துச் சென்று உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து பரிமாறியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவரது மாமாவான 67 வயதான லியோன் பை மற்றும் அவரது 4 வயது பேத்தி கேயோஸ் யேட்ஸ் ஆகியோரையும் ஆண்டர்சன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அத்தை டெல்சி பையை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதையடுத்து 3 கொலை மற்றும் தாக்குதல் முயற்சிகள் செய்ததாக ஒப்புக்கொண்டு கிரேடி கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஆண்டர்சன் சரணடைந்தார். இதையடுத்து, கொலை செய்ததை ஒப்புக்கொண்ட ஆண்டர்சனுக்கு பரோல் இல்லாமல் 5 தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகள் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, ஆண்டர்சன் 2021 இல் போதைப்பொருள் வழக்கில் சிக்கி அதற்காக 20 வருடங்கள் சிறை தண்டனையை பெற்றுள்ளார். தண்டனை காலத்தில் வெறும் 3 ஆண்டுகள் கழிந்த நிலையில், முன்கூட்டியே விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தண்டனை குறைப்பு, சிறை மாற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது தவறுதலாக ஆண்டர்சன் பெயர் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

சீசன் தொடங்கியாச்சு!... தினமும் காலையில் கம்பங்கஞ்சி குடியுங்கள்!... வெரைட்டி ரெசிபி இதோ!...

Sun Mar 19 , 2023
கோடை சீசனில் தினமும் காலையில் சாப்பாட்டிற்கு பதிலாக கம்பங்கஞ்சி குடித்தால் உடல் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும். சீசன் நேரத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, அதிகபட்ச சுவை, ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தைப் பெறச் சிறந்த வழியாகும். தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ளதால், புத்துணர்ச்சியூட்டும் உணவு வகைகளை தவறவிடாதீர்கள். அந்தவகையில் காலை உணவுகளை எடுத்துக்கொள்வதில் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். சிலர் காலை நேரங்களில் சாப்பிடாமலேயே இருப்பதால் அவர்களுக்கு நாள்முழுவதும் […]

You May Like