பெண் பத்திரிகையாளரை ஒருவர் தகாத முறையில் தொடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு ஆண் பெண் பத்திரிகையாளரை தகாத முறையில் தொடுவதைக் காணலாம். இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும், இதை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் ஸ்பெயினின் மாட்ரிட்டில் செப்.12ஆம் தேதி நடந்தது.
பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர் இசா பலாடோ மாட்ரிட்டில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை நேரலையில் அறிக்கை செய்து கொண்டிருந்த போது, ஒரு நபர் அவரை அணுகினார். மேலும் தகாத முறையில் அவரை தொட ஆரம்பித்தது பெண் பத்திரிகையாளருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. வைரலான வீடியோவில், இந்த நபர் எவ்வாறு பெண்ணின் உடலில் பின்னால் இருந்து தனது கையை வைத்து, நீங்கள் எந்த சேனலுக்கு வேலை செய்கிறீர்கள் என்று கேட்டதைக் காணலாம்.
இதைப் பார்த்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ஆச்சரியப்பட்டு, இஷாவிடம், ‘இடைமறித்ததற்கு என்னை மன்னியுங்கள். அவர் உங்களை தொட்டுவிட்டாரா?’ என்று கேட்க, பெண் பத்திரிகையாளர் சங்கடமான சூழ்நிலையில் ஆம் என்கிறார். இதனால் கோபமடைந்த தொகுப்பாளர், தயவுசெய்து அந்த நபரை கேமராவில் என் முன் கொண்டு வாருங்கள் என கூறினார்.
இதற்குப் பிறகு பெண் நிருபர் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நாங்கள் எந்த சேனலைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? என்னை தொட்டாயா? நான் நேரலையில் அறிக்கை செய்கிறேன் என்று கூறினார். ஆனால், அந்த நபர் தான் தவறு செய்யவில்லை என்று மறுக்கிறார். இருப்பினும், இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அவரை மாட்ரிட் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வீடியோவை காண: https://x.com/StefSimanowitz/status/1701976993238057437?s=20