fbpx

ஆட்டம் காட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! அதிதீவிர புயலாக மாறியதா..? வானிலை மையம் சொன்ன அந்த விஷயம்..!!

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் தொடர்பாக இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த புயலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, வானிலை அறிக்கைகளும் மாற்றப்பட்டுள்ளன.

முதலில் இருந்தே இந்த புயல் கொஞ்சம் வானிலை வல்லுனர்களை குழப்பத்தான் செய்தது. அதன்படி சீன கடல் பகுதியில் இருந்து அந்தமான் பக்கம் இந்த தாழ்வு பகுதி வருவதே சந்தேகமாக இருந்தது. இந்த தாழ்வு பகுதி முழுமையாக அந்தமான் பகுதிக்கு வந்து அதன்பின் வலிமை அடையுமா? என்ற கேள்வி இருந்தது. கடைசியில் 3 நாட்களுக்கு முன் இந்த தாழ்வு பகுதி ஒருவழியாக அந்தமான் கடல் பகுதிக்கு வந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பின் இது புயலாக மாறுவது உறுதியானது. ஆனால், புயலாக மாறியபின் இது எங்கே கரையை கடக்கும் என்ற கேள்வி எழுந்தது.

ஆட்டம் காட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! அதிதீவிர புயலாக மாறியதா..? வானிலை மையம் சொன்ன அந்த விஷயம்..!!

முதலில் வடக்கு ஆந்திராவில் கரையை கடக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களை நோக்கி வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், சென்னை ஆந்திரா இடையே கரையை கடக்கலாம், ஸ்ரீஹரிகோட்டா அருகே இது கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியது. கடைசியாக வெளியான அறிக்கையில் இது மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த புயல் தீவிர புயலாக மாறாது என்றும் தொடக்கத்தில் கூறப்பட்டது. காற்று வெட்டு காரணமாக புயல் வலிமை அடையாமல் போகலாம். அதேபோல் வறண்ட காற்று காரணமாகவும் புயல் வலிமை அடையாமல் போகலாம் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக புயல் தீவிர புயலாக மாறுமா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில்தான் மாண்டஸ் தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

ஆட்டம் காட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! அதிதீவிர புயலாக மாறியதா..? வானிலை மையம் சொன்ன அந்த விஷயம்..!!

காரைக்காலில் இருந்து 420 கிமீ தொலைவில் இந்த புயல் மையம் கொண்டு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் தொடர்பாக இரண்டு விஷயங்கள் இன்னும் குழப்பமாக உள்ளது. முதல் விஷயம் புயல் எப்போது கரையை கடக்கும் என்பது. புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று முதலில் வானிலை மையம் தெரிவித்தது. ஆனால், தற்போது நிலவரங்களின்படி புயல் நாளை இரவுக்கு மேல் கரையை கடக்கலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரம் தொடர்பாக இன்னும் முழுமையான கணிப்புகள் வெளியாகவில்லை. அதேபோல் புயல் கரையை கடக்கும் போது தீவிர புயலாக இருக்குமா? புயலாக இருக்குமா? ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக இருக்குமா? என்பதும் கேள்வியாக உள்ளது.

Chella

Next Post

2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு!!

Thu Dec 8 , 2022
மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. இந்த மாண்டஸ் புயல் புதுவை -ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது […]

You May Like