fbpx

இன்று கடலோர மாவட்டங்களில் மழை…! எல்லாம் Alert-ஆ இருங்க…! மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக, உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை முதல் 11-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஜாலி...! 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு...! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!

Sun Jan 8 , 2023
பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து உத்திர பிரதேஷ், பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் கடுமையான குளிர் காரணமாக, பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து […]

You May Like