fbpx

#Alert: மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி…! இந்த மாவட்டத்தில் கனமழை…! மீனவர்களுக்கு எச்சரிக்கை ‌‌‌…!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 23-ம் தேதி தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும். டிச.22ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வேகமாக பரவும் செய்தி...! ஜனவரி 1-ம் தேதி முதல் புழக்கத்தில் 1000 ரூபாய் நோட்டு...! உண்மை என்ன...?

Tue Dec 20 , 2022
ஜனவரி 1, 2023 முதல் ரூ.1000 நோட்டுகள் திரும்ப வரும் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 1, 2023 முதல் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வரும் என்ற செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான PIB Fact […]

You May Like