fbpx

சிறுமியை பலாத்காரம் செய்த எம்.எல்.ஏ..!! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

உத்தரப்பிரதேச மாநிலம் துத்தி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த சிறுமியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் ராம்துலார் கோண்ட் மீது போக்சோ சட்டம் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. மேலும், இந்த பாலியல் வன்கொடுமை நடைபெறும்போது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை.

தேர்தலில் வெற்றிபெற்று அவர் எம்.எல்.ஏ ஆனதால், இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் வந்தபோது, ராம்துலார் கோண்ட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராம்துலார் கோண்ட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Chella

Next Post

தூக்கத்தில் தண்ணீரில் மூழ்குவதுபோல் கனவு வருதா..? இதற்கு என்ன பலன் தெரியுமா..? அதிர்ஷ்டம் தான்..!!

Wed Dec 13 , 2023
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியம். அப்படி தூங்கும் போது வரும் கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது. கெட்டது நடப்பது போலவும் வரலாம். ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும். கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் […]

You May Like