fbpx

’பணம் ரெடியா இருக்கு.. அவங்கதான் வரல’..!! ஐகோர்ட்டில் விஷால் தரப்பு சொன்ன பதில்..!! அதிரடி உத்தரவு..!!

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? என நடிகர் விஷாலுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடன் விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முழுமையான தகவல்களை விஷால் தாக்கல் செய்யவில்லை என லைகா நிறுவனம் புகார் செய்தது. இதையடுத்து, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவர் சமீபத்தில் தனது சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ததாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை இன்னும் ஏன் செலுத்தவில்லை என்று நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 2021ஆம் ஆண்டில் ரூ.80 கோடிக்கு விஷால் பணப்பரிவர்த்தகம் செய்துள்ளார். ஆனால், எங்களுக்கு வேண்டுமென்றே செலுத்த வேண்டிய தொகையைத் தராமல் உள்ளார் என லைகா தரப்பு வாதம் செய்துள்ளது.

இதற்கு பணத்தை தர தயாராக இருப்பதாகவும், ஆனால் லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என விஷால் தரப்பில் வாதம் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கு வரும் நவம்பர் 1ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Chella

Next Post

Israel-Hamas war: பணயக் கைதிகளை விடுவிக்கா விட்டால் மின்சாரம் கிடையாது..! இஸ்ரேல் எச்சரிக்கை..!

Thu Oct 12 , 2023
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவுக்கு இடையேயான போர் 6ஆம் நாளை எட்டியுள்ளது. முதலில் ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக காசா நகர் பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. உணவு குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக மக்கள் தவித்து வருகின்றனர், 5,000 மேல் பாலஸ்தீன மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் […]

You May Like