fbpx

Alexa-வால் தெறித்து ஓடிய குரங்கு..!! தப்பித்த 13 வயது சிறுமி..!! நடந்தது என்ன..?

திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கிடம் இருந்து Alexa சாதனம் மூலம் 13 வயது சிறுமி தப்பித்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த நிகிதா என்ற 13 வயது சிறுமி, அவாஸ் விகாஸ் காலனியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு, வீட்டில் உள்ள உறவினர்கள் வேறு ஒரு அறையில் இருந்தனர். அப்போது, நிகிதா தன் சகோதரியின் ஒரு வயது மகளுடன் முதல் தளத்தில் உள்ள சமையலறை அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, சமையலறைக்குள் திடீரென குரங்கு ஒன்று நுழைந்தது.

வீட்டில் உள்ள மற்றவர்கள் வேறு அறையில் இருந்ததால் குரங்கு வந்தது அவர்களுக்கு தெரியவில்லை. சமையலறைக்கு வந்த குரங்கு பாத்திரங்களை எடுத்து வீச ஆரம்பித்தது. பின்பு, நிகிதாவையும், குழந்தையும் நோக்கி குரங்கு நகர்ந்ததால் என்ன செய்வதென்றே தெரியாமல் சிறுமி தவித்தார். அப்போது குழந்தையும் அலற தொடங்கியது.

பின்னர், அங்கிருந்த ஃபிரிட்ஜின் மீது Alexa (எலக்ட்ரானிக் சாதனம்) இருப்பதை பார்த்த நிகிதா, அலெக்ஸ்சாவிடம் குரங்கை பார்த்து குரைக்குமாறு கூறினார். பின்னர், அலெக்ஸாவும் குரங்கை போலவே குரைக்க, அதை கேட்ட குரங்கு பயத்தில் தப்பியது. இதனால், நிகிதாவின் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து நிகிதாவின் உறவினர்கள் கூறும்போது, Alexa -வை நிகிதா பயன்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது என்று தெரிவித்தனர்.

Read More : உஷார்..!! காயத்திற்கு ஒட்டப்படும் பேண்டேஜால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!! வெளியான பகீர் தகவல்..!!

Chella

Next Post

DMK: முதல்வர் மு.க ஸ்டாலின் உறவினர் திடீர் மரணம்.!! உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.!!

Sat Apr 6 , 2024
தமிழகத்தில் வாக்குப்பதிவு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு( DMK) தொடர்ந்து பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது. திமுகவின் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மைத்துணரும் உடல் நலக்குறைவாழ் இன்று மரணம் அடைந்துள்ளார். மு க ஸ்டாலின் மைத்துனரான லெனின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (DMK) அங்கம் வகித்து வந்தார். கடந்த […]

You May Like