fbpx

இறந்த மகளின் ஜீவனாம்ச தொகையை பெற தாய்க்கு உரிமை உள்ளது!… சென்னை ஐகோர்ட்!

இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவைத் தொகையை பெற தாயாருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜீவனாம்சம் பெற வேண்டி சரஸ்வதி தொடர்ந்த வழக்கில், ரூ.6.22 லட்சம் வழங்க வேண்டும் என சரஸ்வதியின் கணவர் அண்ணாதுரைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சரஸ்வதி உயிரிழந்த நிலையில், அவரது தாயார் ஜெயா மகளின் வழக்கை தொடர்ந்து நடத்தினார். முன்னதாக 1991ஆம் ஆண்டு அண்ணாதுரை மற்றும் சரஸ்வதி தம்பதியினர் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றனர், இதையடுத்து ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என சரஸ்வதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலுவைத்தொகை ரூ.6,22,500-ஐ வழங்கக்கோரிய வழக்கில். அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வாரிசுரிமை சட்டத்தின் படி, மனைவி இறந்துவிட்டால் அவரது சொத்துகள் குழந்தைகள், பெற்றோருக்கு சேரும் என உத்தரவளித்து, அண்ணாதுரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

Kokila

Next Post

இந்த மாநிலங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

Sun Apr 30 , 2023
கிழக்கு-மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலும் வடகிழக்கு மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், வரும் மே மாதத்துக்கான அதிகபட்ச வெப்பநிலை கிழக்கு-மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலும் வடகிழக்கு மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று […]

You May Like