fbpx

நடிகர் விஜய் தொடங்கப்போகும் அரசியல் கட்சியின் பெயர் ’த.மு.க’..? பிப்.4ஆம் தேதி முறைப்படி பதிவு..!!

நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். படங்களில் ஒருபக்கம் நடித்து வந்தாலும், விரைவில் அரசியல் களத்திலும் தடம் பதிக்க உள்ளார். இவரது சமீப நடவடிக்கைகள் அரசியல் களத்தை நோக்கியதாகவே இருக்கிறது. கடந்த வாரம் கூட பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். அதில் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 4ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி கட்சியாக பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளனர். இப்படியான நிலையில்தான், நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது விஜய் தரப்பால் உறுதி செய்யப்படும். ’தமுக’ கட்சி எந்த அளவுக்கு இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Chella

Next Post

"கழுத்தை நெரித்த கடன் தொல்லை.."! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை.!சோக சம்பவம்.!

Mon Jan 29 , 2024
கடன் தொல்லை காரணமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி, இந்திரா நகரில் சி.வெங்கடேஸ்வரன்(54), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு ஒன்றைக் கட்டி, அதில் தனது மனைவி நிர்மலா, மகன் ரிஷிகேசவன்(30) மற்றும் மகள் பூஜா(23) ஆகியோருடன் வசித்து வந்தார். சிவகாசியில் ரசாயன தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை காலை, […]

You May Like