மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான முதல் அமர்வு ஜனவரி மாதம் நடைபெற்றது. ஜனவரி 22ஆம் தேதி நடந்த தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்புகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. ஜே.இ.இ தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியானது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் jeemain.nta.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி ஜே.இ.இ முதன்மை மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டு ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் மொத்தம் 14 பேர் 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். இதில் 13 பேர் மாணவர்களும், ஒரு மாணவியும் அடங்கும். மேலும், ஜே.இ.இ மெயின் 2025 தேர்வில் 44 பேர் 90 சதவீதத்திற்கும் மேல் பெற்றுள்ளனர். இந்த தரவரிசையின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் இறுதி சேர்க்கைக்கான ஜே.இ.இ முதன்மை கவுன்சிலிங் 202-5ல் பங்கேற்க முடியும். 12.5 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.
Read more : சப்பாத்தி செய்யும் போது இந்த தவறை செய்யாதீர்கள்..! நிதி பற்றாக்குறை ஏற்படும்..!! வாஸ்து சொல்வதை கேளுங்க..