சென்னையில் பல்வேறு பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தடுப்புகளில் ஒட்டியுள்ளனர்.
சென்னையில் நள்ளிரவில் வாகன விபத்துக்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக சென்னையில் அதிக அளவில் விபத்துடன் நடைபெறக்கூடிய இடங்களில் விபத்துக்களை தடுப்பதற்காக ஒளிரும் சிவப்பு மின்விளக்குகளை பொருத்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை அமைத்து அதில் காவல்துறை பெயர் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளையும் அமைத்து தீவிர வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், அண்ணாசாலை முழுவதும் போக்குவரத்து போலீசார் இரவு முழுவதும் இரும்பு தடுப்புகளில், வாகன ஓட்டிகள் மோதி விபத்துகளை தவிர்க்கும் வகையில் வாகனத்தின் ஒளிவிளக்கில் ஒளிரக்கூடிய வண்ணநிறத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வாகனம் வரும் பொழுது வாகனத்தின் ஒளியின் காரணமாக ஸ்டிக்கர்கள் ஜொலிக்கும் பொழுது வாகன ஓட்டிகள் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை இயக்க இயலும் என்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.