fbpx

’இந்த மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்கள் யாரும் வராதீங்க’..!! ஆட்சியர் எச்சரிக்கை..!!

இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இதற்கிடையே, மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மிக கனமழை முதல் அதிகனமழை வாய்ப்புக்கான “Red Alert” எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கிடையே, இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, ”மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 18,19, 20ஆம் தேதி நீலகரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். கனமழை சமயங்களில் பணியாற்ற முதல் நிலை பணியாளர்களாக 3500 பேர் தயார் நிலையில் உள்ளனர். 456 தற்காலிக புயல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு அவசர காலங்களில் செயல்பட பாதிப்பு நிறைந்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Read More : ’சினிமாவுல வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணனும்’..!! நடிகை தீபா பாலு ஓபன் டாக்..!!

Chella

Next Post

வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ்..!! அசத்தும் மின்சார ஆட்டோ..!! வாங்கப்போறீங்களா..? விலையை தெரிஞ்சிக்கோங்க..!!

Fri May 17 , 2024
Omega Seiki நிறுவனம் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் 3 சக்கர எலக்ட்ரிக் வாகனத்தை (EV) அறிமுகம் செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான Omega Seiki Mobility (OSM) இந்திய சந்தையில் OSM Stream City Qik என்ற புதிய பயணிகள் மின்சார 3 சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இது வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் என்பது இதன் சிறப்பு. இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் […]

You May Like