fbpx

அடுத்த 3 மணி நேரம்..!! 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை..!!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், மயிலாடுதுறை, நாகை, மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி!… விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?… எப்படி இருக்க வேண்டும்?… பலன்கள் என்ன?

Mon Nov 13 , 2023
ஆவணி பிறந்து விட்டால் சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானுக்கு விழா எடுப்பார்கள். அதை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்புத் திதியாகச் சொல்வர். அதே போல ஐப்பசி பிறந்து விட்டால் ஆறுமுகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதியாகும். சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டாலோ மண மாலை சூடும் […]

You May Like