fbpx

அடுத்த சம்பவம் கோவைக்கு தான்..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள்..!! எல்லாம் ரெடியா இருங்க..!!

தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையே, இதுபோன்ற திடீர் மழைபொழிவு இனிவரும் காலங்களில் தொடர்கதையாக இருக்கலாம். குறிப்பாக சென்னை, கோவை போன்ற நகரங்கள் இதுபோன்ற மழைபொழிவை சந்தித்தால் அந்த நகரங்கள் தாங்காது என்றும் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 6 முதல் 10 செ.மீ. வரை மழை பெய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுபோன்ற நிலையை சந்தித்தால் நகரம் தாங்காது என்றும் தெரிவித்திருக்கின்றனர். கோவையின் மேற்குதொடர்ச்சி மலைக்கு அப்பால் வான்வழியாக 60 கி.மீ. தொலைவில் தான் அரபிக்கடல் உள்ளது. அரபிக்கடலில் உருவாகும் தாழ்வழுத்த மண்டலம், காற்றழுத்த மேல் மற்றும் கீழ் சுழற்சியின் காரணமாக உருவாகும் ஈரக்காற்று, உயரமான மலைமுகடுகளில் மோதி மீண்டும் அரபிக்கடலுக்கே திரும்பும்.

அப்படி நிகழும் பொழுது அதிப்படியான மழைப்பொழிவு இருக்கும். இதன் தாக்கம் கோவை மாவட்டத்திலும் எதிரொலிக்கும். அப்போது நாள் ஒன்றுக்கு 6 முதல் 10 செ.மீ. வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Chella

Next Post

பாஜகவிற்கு தரமான பதிலடி.! காங்கிரஸ் அதிரடி.! ஹிஜாப் தடையை நீக்கிய முதல்வர் சித்தராமையா.!

Sat Dec 23 , 2023
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசால் அமலில் இருந்த ஹிஜாப் தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் சித்தராமையா. இது தொடர்பாக மைசூரில் நடைபெற்ற விழாவின்போது அவர் இந்த அறிவிப்பை தெரிவித்திருக்கிறார். பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வது குறித்து கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக மிகப்பெரிய போராட்டம் பிடித்த நிலையில் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து […]

You May Like