fbpx

சிக்கியது அடுத்த ஆதாரம்!… ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.70 ஆயிரம் கோடி சம்பாதித்த திமுக!… பகீர் கிளப்பிய அண்ணாமலை!

திமுக ஆட்சிக்கு வந்த 31 மாதங்களில் ரூ.70 ஆயிரம் கோடி சம்பாதித்து வைத்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் அரசியல் யாத்திரை ஒன்றை துவங்கியுள்ளார். கடந்த 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த யாத்திரையை ராமேஸ்வரத்தில் துவக்கி வைத்தார். அதன் ஒருபகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் பாத யாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கான அரசியலாக உள்ளது. சாதாரண மக்களுக்கான அரசியலாக இல்லை. படிப்புக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லை. தண்ணீர் பிரச்னையால் விவசாயம் செய்ய முடியவில்லை.

இந்த யாத்திரையின் மூலம் புதிய அரசியலை கொண்டு வர வேண்டும். பா.ஜ., ஆட்சியில் ஜாதி, மத, அடாவடி, குடும்ப அரசியலுக்கு இடம் கிடையாது. தமிழகத்தின் முக்கியமான பிரச்னை, தரமான கல்வி கிடைக்கவில்லை. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரமில்லாமல் இருக்கிறது. எந்த பணமும் வாங்காமல், உலக தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களும், இந்த சமுதாயத்தில் முக்கியமான மனிதர்களாக வர வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 31 மாதங்கள் ஆகிறது. 70ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து வைத்துள்ளார் என்று பேசினார்.

Kokila

Next Post

பெண் நீதிபதி படுகொலை!… கணவரின் கொடூர செயல்!… மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

Wed Jan 31 , 2024
மத்தியபிரதேசத்தில் பெண் நீதிபதியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த ஷாபுரா நீதிமன்றத்தின் துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட் நிஷா நபிட் (40) என்பவர் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணீஷ் சர்மா. இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போதிருந்தே மணீஷ் சர்மாவுக்கு எவ்வித வேலையும் கிடைக்காமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவர் – மனைவிக்குள் […]

You May Like