fbpx

மா.செ.பழனியப்பனுக்கு அடுத்த ஜாக்பாட் !

அதிமுகவில் இருந்த பழனியப்பன் அமமுகவுக்குச் சென்றார். அங்கிருந்து அவரை திமுகவுக்கு இழுத்து வந்தவர் தற்போதைய தமிக அரசியலில் ஆக்டோபஸ் என்று வர்ணிக்கப்படும் செந்தில் பாலாஜி .

2021 ஜுலை 3-ம் தேதி பழனியப்பன் திமுகவிற்கு வந்தபோதே உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவேன் என வாக்குறுதி கொடுத்தார் செந்தில் பாலாஜி.

அதே நேரத்தில் பழனியப்பன் , திமுகவில் இணையும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில்உ ள்ள 5 தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம் . பழனியப்பன் சிறிது காலம் முன்பே திமுகவுக்கு வந்திருந்தால் தருமபுரியும் நமதாக இருந்திருக்கும் என்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்னம்பிக்கையை பெற்றிருந்தாலும் பழனியப்பன் திமுகவில் இணைந்த உடனே அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனினும் சோர்வடையாமல் கட்சிக் கூட்டங்கள் , பொதுக்கூட்டம் என தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

கடந்த மே மாதம் சென்னை பல்கலைக்கழகத்தில் ஸ்டாலின் பங்கேற்ற பட்டமளிப்பு விழா மேடையில் முனைவர் பட்டம் பெற்றார் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் . முனைவர் பட்டம் பெற்ற பழனியப்பனை மேடையில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.அரசியலில் பணியாற்றிக் கொண்டே ஆராய்ச்சிப் பட்டம் பெற்றுள்ள பழனியப்பனை வியந்து பாராட்டிய ஸ்டாலின் அதன் தொடர்ச்சியாக .. பென்னாகரம் , பாலக்கோடு ஆகிய தொகுதிகள் அடங்கிய தருமபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளரா இருந்த இன்ப சேகரன் மாற்றபபட்டு அப்பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பழனியப்பன்.

பாலக்கோடு தொகுதி அதிமுகவின்கே.பி அன்பழகன் கோட்டையாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதனால் அப்பகுதியை திமுக கோட்டையாக மாற்றும் முயற்சியில் பழனியப்பன் ஈடுபட்டுள்ளார்.

பழனியப்பன மாவட்ட செயலாளராக பொறுப்பு ஏற்ற உடன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார் அதே போல் திமுகவை வலுப்படுத்த அதிமுக, பாமக , அமமுக, தேமுதிக , உள்ளிட்ட கட்சிகளின் தலைமை மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் வேலையை மழு மூச்சாக இருக்கின்றார்.

இந்நிலையில் பாலக்கோடு தொகுதியில் உள்ள தண்டுகாரனஹள்ளி ஊராட்சி தலைவராக உள்ளவர் மணி . பல ஆண்டுகளாக பாமகவில் உள்ளார். பழனியப்பன்அப்பகுதியில்திமுக நிர்வாகிகளை சந்தித்து வந்தார். அப்போது  ஊராட்சித் தலைவர் மணி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவர் திமுகவில் இணைத்துக் கொண்டார். அதே நேரத்தில் திமுக தலைவர் பதவி தேர்தல் நடபெறுகின்றது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் மா.செ. பழனியப்பனுக்கு பேசி வாழ்த்துக்கள் சொல்லி சென்னைக்கு வர சொல்லியிருக்கின்றார்.

அநேகமாக அடுத்த ஜாக்பாட்டாக வாரிய தலைவர் பொறுப்பு கிடைக்கப்போகின்றது என்கின்றார்கள். பழனியப்பன் ஜெ.ஆட்சியின்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் என்பதால் அவருக்கும் அந்த துறை சார்ந்த வாரிய பொறுப்பு கிடைக்கும் என்கின்றார்கள்.

பழனியப்பனுக்கு கிடைக்கப்போகும் இந்த அடுத்தக்கட்ட ஜாக்பாட் குறித்து அமைச்சர் பொன்முடி ஏக வருத்தத்தில் இருக்கின்றார். அவருக்கு இந்த வாரிய பொறுப்பு கிடைக்ககூடாது என்கின்ற முனைப்பில் காய்களை நகர்த்தி வருகின்றார். பழனியப்பனின் நல்ல நேரமோ , பொன்முடியின் கெட்ட நேரமோ ஓசி பஸ் குறித்த பேச்சு அவருக்கு மக்களிடத்தில் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளதால் கட்சி தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது.

Next Post

எங்கள் திருமணத்தின்போது எனக்கு 40 வயது… என் கணவருக்கு 50 வயது … அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல நடிகை ..

Wed Oct 5 , 2022
சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகர், நடிகைகள் தாமதமாக திருமணம் செய்கின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது எனக்கு திருமணமாகும் பொழுது 40 வயது அவருக்கு 50 வயது என்று கூறிய பிரபல நடிகை தங்களுடைய வாழ்வில் நடந்த ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது 90 காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை நிர்மலா. இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு […]

You May Like