fbpx

அடுத்தடுத்து வந்த ஃபோன் கால்..!! ஆடையை கழற்றி நிர்வாணமாக நின்ற பெண் வழக்கறிஞர்..!! நடந்தது என்ன..?

பெங்களூருவில் வசிக்கும் 29 வயது பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு மர்ம நபர்கள் அடுத்தடுத்து ஃபோன் செய்து நிர்வாண வீடியோவை பெற்றுள்ளனர். ஒருவர் செல்போனில் விடுத்துள்ளார். மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியவர், உங்கள் பெயரில் தாய்லாந்தில் இருந்து பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலில் எம்.டி.எம்.ஏ. மருந்துகள் உள்ளன. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் உங்களை தொடர்பு கொள்வார்கள் என மிரட்டியுள்ளார். கூரியரில் இருந்து ஒருவர் கூறிய சில நிமிடங்களில், மும்பை போலீஸ் என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபர் அந்த இளம் பெண் வழக்கறிஞரிடம் பேசினார்.

அவர் இந்த வழக்கு மிகவும் சிக்கலானது. சி.பி.ஐ. மேலும் விசாரணைக்காக சுங்கத் துறைக்கு மாற்றியுள்ளோம். சிபிஐ அதிகாரிகள் பேசுவார்கள் என்று மிரட்டியுள்ளார். இதனால், அவர் பயந்து, அதைப் பற்றி யோசிக்கக்கூட முடியாமல் போனார். வழக்கறிஞரிடம் சி.பி.ஐ. அதிகாரி அபிஷேக் சவுகான் என்று கூறி மற்றொரு நபர் பெண் வழக்கறிஞரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் கூறுகையில், இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் பிரமுகர்களுக்கும், பிரபல கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். அப்போது திடீரென செல்போனில் வீடியோவை ஆன் செய்யச் சொல்லி பெண் வக்கீலை படுக்கையில் படுக்கச் சொன்னார்.

அதன்படி, பெண் வக்கீலும் பயந்து செய்துள்ளார். சுங்கத்துறை அதிகாரி என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபர் பெண் வழக்கறிஞரை தொடர்பு கொண்டு, போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் குறித்து பரிசீலிக்க அவரது செல்போனில் வீடியோவை ஆன் செய்து நிர்வாணமாக போஸ் தர வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதில் சந்தேகம் கொள்ளாத பெண் வழக்கறிஞர், வீடியோ அழைப்பில் நிர்வாணமாக வந்தார். அதை வீடியோ எடுத்தனர். பிறகு, அந்த பெண் வழக்கறிஞரை அந்த கும்பல் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகவும், வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் எனவும் மிரட்டத் தொடங்கியது.

பின்னர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால், சந்தேகம் அடைந்த அவர், போலீசாரிடம் விசாரித்தபோது, மும்பை போலீஸ், சிபிஐ, சுங்கத்துறை அதிகாரிகள் என கூறி மர்ம நபர்கள் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவங்கள் குறித்து பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read More : ’உதயசூரியன் தமிழகத்தில் உதிக்கக் கூடாது’..!! நிர்மலா சீதாராமன் அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

Chella

Next Post

தொடரும் விடுமுறை..!! ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயாராக முடியாமல் தவிக்கும் மாணவர்கள்..!!

Fri Apr 12 , 2024
அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொடருமா? ஆண்டு இறுதித் தேர்வானது நடைபெறுமா? என்னும் குழப்பத்திலும், அச்சத்திலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மயிலாடுதுறையில் சில நாட்களுக்கு முன் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இச்சிறுத்தை நேற்று (ஏப்ரல் 11) அரியலூர் மாவட்ட பொன்பரப்பி, சிதலவாடி பகுதிகளில் நுழைந்து சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பயத்துடன் உள்ளனர். இந்நிலையில், பள்ளி […]

You May Like