fbpx

’லியோ’ படத்திற்கு அடுத்து வந்த சிக்கல்..!! இதற்கும் தடை விதித்த கோர்ட்..!! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

லியோ படத்திற்கு அனுமதியின்றி பேனர் வைக்க உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதே நேரத்தில் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி மறுத்த நிலையில், உள்துறை செயலாளர் அமுதாவை, லியோ திரைப்பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர்கள் சந்தித்து பேசி கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், லியோ படத்திற்கு அனுமதியின்றி பேனர் வைக்க உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், லியோ படத்திற்காக திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு திரையரங்குகள் முன்பு மிக உயரமான பேனர்கள், கட் அவுடுகள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக ஒலிகளை எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கவும் திட்டமிட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திரையரங்குகள் முன்பு பேனர்கள் வைக்க எந்த அனுமதியும் தரவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி வழக்கறிஞரை அழைத்து நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.

அப்போது, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டதாக திண்டுக்கல் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ’அனுமதியின்றி லியோ படத்திற்கு பேனர்களை வைக்கக் கூடாது’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Chella

Next Post

சிவகார்த்திகேயானால் இமான் குடும்பம் பிரிந்தது..! அன்று மோகன் செய்ததையே இன்று சிவகார்த்திகேயன் செய்துள்ளார்..! வலைப்பேச்சு அனந்தன்...

Tue Oct 17 , 2023
இசைமைப்பாளர் இமானின் சமீபத்திய பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் என்று கூறினார். இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் இமான் சிவகார்த்திகேயன் விவகாரத்தில் நடந்தது என்ன என்று வலைப்பேச்சு அனந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் டி இமான். இவர் சிறந்த பாடகராகவும் அசத்தி வருகிறார். […]

You May Like