fbpx

அடுத்த ஷாக்.. 7,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. பணி நீக்க செயல்முறையை தொடங்கிய டிஸ்னி நிறுவனம்..

கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. இதே போல் சமீபத்தில் ஜூம் நிறுவனம் 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.. அதே போல் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக இண்டர்நெட் நிறுவனமான Yahoo அறிவித்தது..

இந்நிலையில் டிஸ்னி நிறுவனம் பணி நீக்க செயல்முறையை செயல்படுத்த தொடங்கி உள்ளது.. $5.5 பில்லியன் செலவைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, டிஸ்னி முதல் சுற்று வேலை நீக்கங்களைச் செயல்படுத்த உள்ளது.. இதனால் 7,000 பேர் வேலையை இழக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். அதில் “ பிப்ரவரியில் திட்டமிடப்பட்ட பணிநீக்கங்கள் தொடங்கியுள்ளன..

இந்த வாரம், நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நாங்கள் அறிவிக்க உள்ளோம். அடுத்த 4 நாட்களில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் முதல் குழுவிற்கு அந்த பிரிவின் தலைவர்கள் நேரடியாக செய்திகளை தெரிவிப்பார்கள்.. ஏப்ரலில், ஒரு பெரிய சுற்று பணிநீக்கங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7,000 பணியாளர்கள் கோடைகாலம் தொடங்குவதற்கு முன் விடுவிக்கப்படுவார்கள்..” என்று தெரிவித்துள்ளார்..

டிஸ்னி என்டர்டெயின்மென்ட், டிஸ்னி பார்க்ஸ், எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் ப்ராடக்ட்ஸ் மற்றும் கார்ப்பரேட் உட்பட, அந்நிறுவனத்தின் பல முக்கியமான பிரிவுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.. 2023-ம் ஆண்டில் தற்போது வரை மட்டும், 350க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

’விடுதலை’ படத்தில் இத்தனை கெட்டவார்த்தைகளா..? லிஸ்ட் போட்டு தூக்கிய சென்சார் போர்டு..!!

Tue Mar 28 , 2023
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய 5 திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை […]

You May Like