fbpx

அடுத்த அதிர்ச்சி..!! அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் மனித கழிவுகளை வீசிய மர்ம நபர்கள்..!! பல்லடத்தில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!!

பல்லடம் அருகே அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் மனித கழிவு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தான், இந்தப் பள்ளியின் வகுப்பறைக்குள் மனித கழிவு வீசப்பட்டுள்ளது.

அரசு உயர்நிலைப்பள்ளியின் 10ஆம் வகுப்பு அறையில் மர்ம நபர்கள் மனித கழிவுகளை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கேவலமான செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனே போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்லடம் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வகுப்பறைக்குள் மனித கழிவுகளை வீசியது யார்..? என்ன காரணத்திற்கு வீசினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் மனித கழிவு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி..!! கருவை கலைப்பது குறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும்..!! சென்னை ஐகோர்ட்

English Summary

The incident of human waste being thrown into a classroom at a government school near Palladam has caused a stir.

Chella

Next Post

முதுகலை மருத்துவ சேர்க்கையில் குடியுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு ரத்து..!! - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Wed Jan 29 , 2025
SC Strikes Down Domicile Quotas In PG Medical Admissions, Says 'Violates Article 14'

You May Like