Israel attack: கடந்த சில நாட்களுக்குமுன் ஹிஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், இன்றைய இஸ்ரேல் தாக்குதலில் அவரது சகோதரர் ஹஷேம் சஃபிதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர், இஸ்ரேல் – ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு இடையேயான போராக உருமாறி தற்போது, இஸ்ரேல் – ஈரான் இடையே கடும் சண்டை துவங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவு நாடுகள் குரல் கொடுப்பதால், மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதைத் தொடர்ந்து, லெபனானில் ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் கடந்த செப். 27-ம் தேதி லெபனானில் தாஹியாக் நகரில் ஹெஸ்பொல்லா தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்தநிலையில், இன்று மத்திய பெய்ரூட் நகர் கர்பல்லாவில் ஹசன் நஸ்ரல்லா சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இன்று நடத்திய தாக்குதலில் நஸ்ரல்லாவின் சகோதரர் ஹஷேம் சஃபிதீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இருப்பினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஹிஸ்புல்லாவின் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்து குழுவின் அரசியல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் ஹஷேம் சைபுதீன் உட்பட பலரை இந்தத் தாக்குதலில் குறிவைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தனர்.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, சஃபிதீனும் இராணுவ நடவடிக்கைகளை நிர்வகிக்கும் ஜிஹாத் கவுன்சிலில் சேர்க்கப்பட்டுள்ளார். 2017ல் அமெரிக்க வெளியுறவுத்துறையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: போர் பதற்றம்!. பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம்!. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!