Uri attack: பஹல்காம் தாக்குதல் சம்பவ அதிர்ச்சி அடங்குவதற்குள் காஷ்மீரின் உரிப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியின் பைசாராம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கூடியிருந்த போது, அங்கு வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 2 அல்லது 3 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடு துவங்கியதும், சுற்றுலா பயணிகளை நம்பியிருக்கும் கைடுகள், சிறுவணிகர்கள் அனைவரும் தப்பியோடி தலைமறைவாகினர். தொடர்ந்து அங்கு காயமடைந்தவர்கள் உதவி கேட்டு கதறிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஒருவர், தங்களின் பெயரை கேட்டதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துவருகின்றனர். மேலும் சிலர், தாங்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் என்பதால் தாக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்உ பயங்கரவாதிகள் காஷ்மீரின் உரிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். ஆனால், இராணுவம் அதை முறியடித்துவிட்டது. அறிக்கையின்படி, 2-3 பயங்கரவாதிகள் உரியின் நாலாவில் உள்ள சர்ஜீவன் பகுதிக்கு அருகில் ஊடுருவ முயன்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வீரர்கள் உடனடியாக பொறுப்பேற்று பதிலடி கொடுத்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியில் மீண்டும் ஒரு ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. இது குறித்த தகவலை சினார் கார்ப்ஸ் X இல் பகிர்ந்துள்ளது. புதன்கிழமை, பாரமுல்லாவின் உரி நல்லாவில் உள்ள சர்ஜீவன் பகுதிக்கு அருகே ஊடுருவ முயன்ற சுமார் 2-3 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். கட்டுப்பாட்டுக் கோட்டில் நிறுத்தப்பட்டிருந்த வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து அவர்களை தடுக்க முயன்றனர், இதன் விளைவாக துப்பாக்கிச் சூடும் நடந்தது. மேலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.