அனிமேஷன் அவதார் வடிவில் எமோஜிக்களை பகிரும்படியான புதிய அம்சத்தை வெளியிட உள்ளதாக வாட்ஸ் அப் அறிவித்ததுள்ளது.
உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. உலகம் முழுவதும் அதிகளவில் வாட்ஸ்அப் செயலி மூலமாகத்தான் குறுஞ்செய்தி, வீடியோ, ஆடியோ ஆகியவை அனுப்பப்படுகிறது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கட்டாயம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வபோது புதுபுது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் பல்வேறு விதமான ஸ்டிக்கர்ஷை வெளியிட்டது. இது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்பொழுது மீண்டும் ஒரு புதிய அம்சத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, அனிமேஷன் அவதார் வடிவில் எமோஜிக்களை பகிரும்படியான சேவைகளை உருவாக்கியுள்ளது. தற்போதைக்கு இந்த அப்டேட் Whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அனைத்து Whatsapp பயனர்களும் இந்த அப்டேட்டை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.