fbpx

கொரோனாவின் அடுத்த அலை?… அமெரிக்காவில் அதிகரிக்கும் தொற்று பரவல்!… எச்சரிக்கை ரிப்போர்ட்!

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் அது கடந்த சில மாதமாக கொஞ்சம் குறைந்துள்ளது. இந்நிலையில் கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல கொரோனா பரவல் ஒவ்வொரு நாடுகளிலும் உருமாற்றம் பெற்று அதிகரிக்கவும், குறையவும் செய்கிறது. அந்த வகையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சற்று அதிகரித்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி மேலும் அதிகரித்து கொரோனாவால் 7100பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்து இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான தகவலில் கடந்த ஆறு அல்லது ஏழு மாதங்களாக குறைந்திருந்த கோவிட் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Kokila

Next Post

நோட்...! தமிழக அரசு வழங்கும் ரூ.1 லட்சம் மானியம்...! ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் இந்த ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்....!

Tue Aug 1 , 2023
நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ வேளாண்மைத்‌ துறை மூலம்‌ 2023-2024 ஆம்‌ ஆண்டில்‌ மாநில வேளாண்மை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, மண்புழு உரம்‌,பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்‌, அமிர்தகரைசல்‌, மீன்‌ அமிலம்‌ போன்ற இயற்கை வேளாண்மை இடுபொருட்கள்‌ தயாரித்து, விற்பனை செய்திட இயற்கை வேளாண்மை இடுபொருள்‌ மையம்‌ நிறுவ, ஆர்வமுள்ள உழவர்‌ குழுக்களுக்கு மானிய உதவியாக குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1.00 இலட்சம்‌ வீதம்‌ 3 குழுக்களுக்கு ரூ.3.00 இலட்சம்‌ மானியம்‌ வழங்கப்படவுள்ளது. சிறு, குறு […]

You May Like