fbpx

’அடுத்த ஆப்பு டெல் நிறுவன ஊழியர்களுக்கு’..!! 6,500 பேர் பணிநீக்கம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

பொருளாதார நெருக்கடி காரணமாக ட்விட்டர், அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கணிப்பொறி சந்தையில் முன்னணி இடம் வகித்து வரும் டெல் நிறுவனமும் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் பட்டியலில் DELL நிறுவனமும் இணைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 5 சதவீதம் பேர் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் எதிர்காலம் குறித்த கேள்வி எழுவதாக தொழிலாளர்களுக்கு இணை தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் கிளார்க் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தைக் குறைப்பது, ஆட்கள் தேர்வை நிறுத்துவது போன்ற ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் டெல் நிறுவனத்தின் கணிப்பொறி விற்பனை கடந்த ஆண்டைவிட 37% வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’..? தந்தையைப் போலவே இரட்டை சதம் அடித்து அசத்தல்..!! யார் தெரியுமா..?

Tue Feb 7 , 2023
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஷிவ்நரின் சந்தர்பாலின் மகன், தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் […]
’புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’..? தந்தையைப் போலவே இரட்டை சதம் அடித்து அசத்தல்..!! யார் தெரியுமா..?

You May Like