ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில், கணவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், கான்புராவில் உள்ள கிராமத்திற்கு அவரது மனைவி சென்றுள்ளார். அப்போது, இவருக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, இவர்கள் அடிக்கடி இரவில் ரகசியமாக சந்தித்து உடலுறவு வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த இளைஞர் நள்ளிரவில் காதலியை காண சென்றுள்ளார். அந்த சமயத்தில் அக்கம் பக்கத்தினர் பார்த்ததும் ஊருக்கே இந்த விஷயம் பரவியது. இதனால், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர், அப்போது இருவரும் வசமாக சிக்கினர். பின்னர், அந்த இளைஞரை ஊருக்கு நடுவில் இருந்த மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
இதில் அந்த இளைஞருக்கு மண்டை உடைந்து, உடம்பெல்லாம் ரத்தம் கொட்டியிருக்கிறது. ஆனால் கடைசிவரை ஊர்க்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கவில்லை. ஆனால், தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரையும் விசாரித்தனர். பின்னர், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர், ஆனால், இருவரின் வீட்டாரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.