fbpx

இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது… ஆய்வில் தகவல்..!!

உலகம் முழுவதும் கொரோனாவால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தொழில் வளர்ச்சி முடங்கியது. கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் தொழில் வளர்ச்சி அதிகரித்தது. இதனால் பொருளாதார மந்தநிலை விலகி, வருவாய் உயர தொடங்கியது. இதன் அடிப்படையில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை ஆய்வு நிறுவனம் ஒன்று திரட்டியது.

இதில் வளர்ந்த நாடுகளை காட்டிலும், வளரும் நாடுகளில் தொழில் லாபம் ஈட்டியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்தது. இந்தியாவில் கடந்த 2021-ஆம் வருடம் லட்சாதிபதிகள் எண்ணிக்கை 7 லட்சத்து 96 ஆயிரமாக இருந்தது. தற்போது லட்சாதிபதிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த உயர்வு இதே நிலையில் நீடித்தால் வருகிற 2026-ஆம் வருடம் இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை சுமார் 16 லட்சமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது 2021-ஆம் வருடத்தூ விட இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிக்கும். இதுபோல உலக அளவில் முதல் 10 பணக்காரர்கள் வசமே 82 சதவீத சொத்துக்கள் இருக்கிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் இப்போதும் அமெரிக்காவும், சீனாவும் மட்டுமே அதிக எண்ணிக்கையில் இடம் பிடித்துள்ளது. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Baskar

Next Post

தனியாருக்கு செல்லும் தமிழ்நாடு மின்சார வாரியம்..? அமைச்சர் செந்தில் பாலாஜி ஓபன் டாக்..!

Wed Sep 21 , 2022
”தனியாருடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் FICCI எனும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தமிழகத்தில் மின் தேவை ஒரு நாளைக்கு 17,000 மெகாவாட் என்ற சராசாரியில் இருக்கிறது. தேவைப்படும் […]
ரூ.2,000-க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவரா நீங்கள்..? தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி முடிவு..!!

You May Like