இன்று நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் மேலும் சோழர்கால செங்கோல் என்று குறிப்பிடப்படும் செங்கோலை நாடாளுமன்றத்தில் மைய வளாகத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே அதற்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இடத்தில் வைத்தார் நரேந்திரமோடி.
இதன் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி செங்கோல் தற்போது தான் சரியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது செங்கோலை வழங்கிய தமிழகத்தின் ஆதீனங்களுக்கு நன்றி எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது.
ஆகவே கூடுதலான இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் அமைந்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் அவர்கள் எங்கே அமருவார்கள்? என்ற கேள்வியை மனதில் வைத்து தான் முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்திருக்கிறார்.