fbpx

உடல் வலிகளை போக்கும் ஒரே பானம்!… தினமும் காலையில் மறக்காம குடியுங்கள்!…

தலைவலி உடல் வலி, உடல் சோர்வு தூக்கமின்மை இதுபோன்ற பிரச்சனைகளால் சிலர் சிரமப்படுகின்றனர். உடம்பில் சக்தியை இல்லாமல் உணவுகள் சரியாக செரிமானம் நடக்காமல் சிலர் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கான ஒரு அருமையான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் பத்திலிருந்து பதினைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த உலர் திராட்சைகளை நன்கு கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சைகளை குறைந்தது 4 மணி நேரமாவது தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

இல்லையென்றால் இரவு தூங்குவதற்கு முன் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் இதை சாப்பிட்டு வரலாம். இவ்வாறு ஊறிய உலர் திராட்சையில் விதை இருந்தால் அதை தனியே எடுத்து விடவும் விதை இல்லை என்றால் அதை தாராளமாக பயன்படுத்தலாம். இவ்வாறு ஊறிய இந்த உலர் திராட்சைகளை அதன் தண்ணீருடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும். இதை நாம் தினமும் எடுத்து வர நம் உடலில் ஒரு சிறிய சோர்வு கூட இல்லாமல் ஆரோக்கியமாக இருப்போம். உடல் பலவீனம் எலும்பு பலவீனத்தால் சிரமப்படுபவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வரலாம்.

இதில் அயன், கால்சியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் ஏராளமான வைட்டமின்கள் உள்ளது. உலர் திராட்சை நம் உடலை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும். மூளைக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தி தலைவலி தலைசிறந்த பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய சக்தி உலர் திராட்சைக்கு உள்ளது. அனிமியா ரத்த சோகை போன்ற நோய்கள் இருப்பவர்கள் இந்த பானத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

Kokila

Next Post

மாதந்தோறும் ரூ.6 லட்சம் லஞ்சம்..!! தட்டிக்கேட்ட கணவர் மீது வரதட்சணை புகார் கொடுத்த பெண் ஐஏஎஸ் ..!!

Wed Jul 5 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பதவியில் இருப்பவர் ஜோதி மவுர்யா. ஐஏஎஸ் அதிகாரியான இவரது கணவர் அலோக் மவுர்யா, பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர். உ.பி. மாநில பஞ்சாயத்து ராஜ் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஊர்க்காவல் துறை டிஐஜி வி.கே. மவுர்யாவிடம், அலோக் மவுர்யா சமீபத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ஜோதிக்கும் எனக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமானது. ஜோதி ஐஏஎஸ் படிக்க நான் உதவி செய்தேன். இந்நிலையில், […]
மாதந்தோறும் ரூ.6 லட்சம் லஞ்சம்..!! தட்டிக்கேட்ட கணவர் மீது வரதட்சணை புகார் கொடுத்த பெண் ஐஏஎஸ் ..!!

You May Like