சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 11 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது. கோடை காலம் வெயில் தாக்கம் அதிகம் என்பதால் கதவைத் திறந்து வைத்து விட்டு இரவு தூங்கியுள்ளனர். நள்ளிரவில் திடீரென்று தங்களது 6 வயது மகளின் அழகை குரல் சத்தம் கேட்டிருக்கிறது. பதறி அடித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற இளைஞர் தங்களின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளனர்.
அதற்குள் அந்த இளைஞர் தப்பி ஓடி இருக்கிறார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிடித்து விட அனைவரும் கட்டி வைத்து அடித்து உதைத்து இருக்கிறார்கள். பின்னர் பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, போலீசார் விரைந்து வந்து கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞர் விக்னேஷை கைது செய்துள்ளனர். அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும் இரவில் கஞ்சா அடித்து விட்டு வீடுகளில் திருடுவது வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது.
அப்படி திருடுவதற்காக சென்ற நேரத்தில் தான் வீடு திறந்து இருந்ததும் சிறுமி கண்ணில் படவும் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதே இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 15 வயது சிறுவனுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.