அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையில், நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகாரளித்தது குறித்த ஓபிஎஸ் தரப்புக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். ஜூலை 11ஆம் தேதி உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துகளை நியாயப்படுத்தும் விதமாக செயல்பாடு உள்ளது எனவும் அவர் கூறினார்.

தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் முறையிட்டிருக்கலாம். ஆனால், இவ்வாறு செய்தது நீதித்துறையை களங்கப்படும் செயல், கீழ்த்தரமான செயல் என்றும் அவர் கூறினார். மேலும், அதிமுக பொதுக்குழு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிக்கிறார். வைரமுத்து தரப்பில் கோரிக்கையை ஏற்று வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.