இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சியங்கள்(எவிடன்ஸ்) சட்டம் ஆகியவற்றைப் புதிய மசோதாக்களுடன் மாற்றுவது தொடர்பான வரைவு அறிக்கைகளை ஏற்க அக்டோபர் 27ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூடுகிறது.
இந்திய தண்டனைச் சட்டம், CrPC மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் குறித்த வரைவு அறிக்கைகளை ஏற்க உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த வாரம் கூடுகிறது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய மசோதா தொடர்பான வரைவு அறிக்கைகள் அக்டோபர் 27 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்று குழு தனது உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று மசோதாக்களையும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க குழுவுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்தக் குழு இதுவரை நடைபெற்ற 11 கூட்டங்களில் சட்ட ஆணையம் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்களின் கருத்துகளை எடுத்துக் கொண்டது. மூன்று புதிய மசோதாக்கள் காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட மற்றும் இன்னும் காலனித்துவ செல்வாக்கு கொண்ட தற்போதைய குற்றவியல் நீதி சட்டங்களுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டது.