fbpx

மூடநம்பிக்கையின் உச்சம்..! 11 ஆம் வகுப்பு மாணவி, சிவபெருமானுக்காக நாக்கை அறுத்து காணிக்கை..!

மூடநம்பிக்கையின் ஒரு பகுதியாக சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில், சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்துவதற்காக 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது நாக்கை அறுத்துக்கொண்டு, தியானம் செய்வதற்காக கோவிலுக்குள் இருந்தபடி தன்னைத் தானே பூட்டிக்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் தேவர்கட்டாவில் உள்ள ஆச்சரிபாலி கிராமத்தைச் சேர்ந்த ௧௬ வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி திங்கட்கிழமை காலை 7 மணியளவில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்திற்கு அருகில் உள்ள சிவன் கோவிளுக்கு தனது நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுத்துள்ளார். இதனையடுத்து கோவில் வளாகம் முழுவதும் ரத்தம் சிந்தியபடி, தனிமையில் தியானம் செய்வதற்காக கோவிலுக்குள் இருந்தபடி தன்னைத் தானே பூட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்தது தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் அப்பகுதி நிர்வாக அதிகாரிகள் கோவிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த ஊர் மக்கள் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி நிர்வாக அதிகாரிகளை கோவிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் கோவிலை சுற்றியும் பாதுகாப்பாக நின்றுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், நாக்கை அர்துர்த்துக்கொண்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தினர். அனால் காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த சிறுமியின் பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. இதன் காரணமாக, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் டாக்டர்கள் குழு சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டனர்.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இப்படி ஒரு மூடநம்பிக்கையான செயலில் ஈடுபட்டதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் இது குறித்து தகவல்களை சேகரிக்க ஊர் மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More: “புது பைக் வாங்க, குழந்தையை வித்துட்டேன்” பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு, பெற்றோர் செய்த காரியம்..

English Summary

The peak of superstition..! 11th class student cut off her tongue and offered it to Lord Shiva..!

Kathir

Next Post

Happy New Year 2025 : பூத்தது புது வருடம்.. 365 நாட்களும் இந்த பூ வாடாமல் வாழ்வில் வாசம் வீச.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

Tue Dec 31 , 2024
Blooming New Year. Happy New Year for 365 days this flower will not wither in your life..

You May Like